ஜப்பானில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_481.html
ஜப்பானில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து மீண்டும் அதுபோன்று பெரிய நிலநடுக்கம் தாக்கும் அபாயம் உள்ளது என்று புவியியல் நிபுணர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானின் டோக்கியோ நகருக்கு 874 கிலோ மீட்டர்கள் தொலைவில் தெற்கே பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து கட்டிடங்கள் ஒரு நிமிடம் வரை குலுங்கின. நிலநடுக்கம் கடுமையாக இருப்பினும் சுனாமி அபாயம் எதுவும் ஏற்படவில்லை.
ஏனெனில், பூமிக்கு அடியில் 676 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று அந்த அமைப்பும் மற்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் கூறியுள்ளது. இந்நிலநடுக்கத்தில், 56 வயது நிறைந்த முதியவர் ஒருவரின் இடுப்பு முறிந்தது. அவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். ஆனால் ஒருவரும் பலியாகவில்லை என்று டோக்கியோ தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
டோக்கியோ டவரில் இருந்த எலிவேட்டர் ஒரு மணிநேரம் இயங்காமல் இருந்ததை அடுத்து அதில் 400 பேர் சிக்கி கொண்டனர். இதேபோன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலைய ஓடுபாதைகள் அரை மணி நேரம் மூடப்பட்டன. ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கால்பந்து போட்டி ஒன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
எனினும் அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. கடந்த மார்ச் 2011ம் ஆண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் சுனாமி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். புகுஷிமா அணு உலையில் 3 உலைகள் உருகி விட்டன.
செர்னோபில் பாதிப்பை அடுத்து உலகின் மோசாமான பாதிப்பு அணு உலையில் ஏற்பட்டதை அடுத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர். பெரும்பான்மையான நில பகுதி பல ஆண்டுகளுக்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் டோக்கியோவில் உணரப்பட்ட 2வது நிலநடுக்கம் இது. அதற்கு முன்பு தலைநகருக்கு மிக அருகே கடந்த திங்கட்கிழமை குறைந்த வலிமை கொண்ட நிலநடுக்கம் உணரப்பட்டது.

