சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்; பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப் போவதில்லை - மகிந்த
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_420.html
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதில் முழு முயற்சியுடன் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக சிங்கல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர முன்னனி நியமிக்கவுள்ள வேட்பாளர் தெரிவு குழுவில் மகிந்தவின் பிரதி நிதி ஒருவரை உள்ளடக்கவும் மகிந்தவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் டீ.பி. ஏக்கனாயக்கவை மேற்கோள் காட்டி அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
