உறவினரைக் கொலை செய்து வீசுவதற்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் கைது - photos

உறவினர் ஒருவரைக் கொலை செய்து எரித்து சடலம் பாதி எரிந்த நிலையில் வான் ஒன்றில் கொண்டு செல்லும் போது சடலத்தையும் மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துருகிரிய கஹந்தொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு குறித்த வான் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வானைச் சோதனை செய்த சந்தர்ப்பத்திலேயே சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தல மடபான பிரதேசத்தில் இக்கொலை நடை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

நீண்ட காலப் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சடலத்தைப் போகும் வழியில் அதிவேக வீதி வழியே வீசி விட்டுச் செல்ல அவர்கள் தீர்மானித்திருந்ததாகவும் சந்தேக நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.



Photo: Lankadeepa


Related

Local 8290859757661223048

Post a Comment

emo-but-icon

item