செல்பீ படம்பிடிக்க முயன்றபோது மின்கம்பியில் உடல் பட்டதால் உடல் கருகி உயிரிழந்த யுவதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_269.html
யுவதியொருவர் செல்பீ படம்பிடித்துக் கொண்டிருந்த போது அதிக வலுவுள்ள மின்சாரக் கம்பியொன்று தற்செயலாக உடலில் பட்டதால் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ருமேனியாவில் இடம்பெற்றுள்ளது.
18 வயதான அனா உர்ஸு எனும் இந்த யுவதி, ருமேனியாவின் வடபிராந்தியத்திலுள்ள இசாய் நகரிரிலுள்ள ரயில் நிலையத்தில் செல்பீ படம்பிடித்துக்கொள்ள முயன்றார்.
இதன்போது 27,000 வோல்ட்ஸ் வலு கொண்ட மின்சாரக் கம்பியொன்று எதிர்பாராத விதமாக அவரின் உடலில் பட்டது. இதனால், அந்த யுவதியின் உடலில் மின்சாரம் பாய்ந்து அவரின் உடல் கருகியது.
இதன்போது அவருக்கு அருகிலிருந்த நண்பியொருவரும் மின் அதிர்ச்சியினால் தூக்கி வீசப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தையடுத்து அனா உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் உயிரிழந்தார். அவரின் நண்பியான 17 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். (MN)
