எகிப்து அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை விதிப்பு - அதிர்ச்சியில் முஸ்லிம் சமூகம்

எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமட் மோர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பெருமளவிலான கைதிகள் சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மொஹமட் மோர்ஸி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட முன்னதாக எகிப்தின் மத விவகார அதிகாரிகள் தண்டனை தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.

அரச ரகசியங்களை வெளியிட்டதாகவும் முன்னாள் அதிபர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரால் ஆதரிக்கப்பட்ட மொஹமட் மோர்ஸி, 2013-ம் ஆண்டு இராணுவத்தினரால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

அன்றிலிருந்து முன்னாள் அதிபருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக ஆட்சியாளர்கள் நீதித்துறையை கருவியாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டிவருகின்றன.

தற்பொழுது 20 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முர்ஸி, ஜனநாயக முறைப்படி சுயாதீனமான தேர்தல் ஒன்றின் மூலம் எகிப்தில் தெரிவான முதலாவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related

World 5838648411195675087

Post a Comment

emo-but-icon

item