பொலிஸ் - பொதுமக்கள் உறவு தொடர்பான சிவில் பாதுகாப்பு குழு வைபவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_144.html
பொதுமக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழலை நாம் இன்று உருவாக்கியுள்ளோம். தொடர்ந்தும் குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து செயற்பட வேண்டும் என அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.கே.டீ. ஹெமந்த தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பதில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் சிவில் பாதுகாப்புத்தலைவர் எம்.எஸ்.எம் ஜஃபர் தலைமையில் அக்கரைப்பற்று ஏசியன் சிப் ஹோட்டலில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறு குற்ற பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். சமீம், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஏ. றாசீக் உட்பட ஆலோசனைசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் மதுபோதையுடன் பெண்களுக்கு தொந்தரவு செய்வது, பாடசாலை மாணவிகளை சேட்டை பண்னுவது, சட்டவிரோதமாக கடல் மண் ஏற்றுவது போன்ற பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.



