ஐபிஎல் சீசன் 8: சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் சீசன் 8ன் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. 

எனவே மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


Related

Sports 5962279745918871030

Post a Comment

emo-but-icon

item