பஸ்ஸை நிறுத்தி வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு - பாக்கிஸ்தானில் 43 பேர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/43.html
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இஸ்மாயிலி ஷியா முஸ்லிம்கள் பயணம் செய்த பேருந்து மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 43 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், பேருந்தை நிறுத்தி கண்மூடித் தனமாகச் சுட்டனர். இஸ்மாயிலி ஷியாக்களின் புனிதத் தலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த 60 பயணிகள் அந்தப் பேருந்தில் இருந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கராச்சியில் மூத்த காவல்துறை அதிகாரிகளின் மீது ஓடும் வாகனத்தில் இருந்தபடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதே குழுதான் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்க வேண்டுமென மாகாண காவல்துறை தலைவர் குலாம் ஹைதர் ஜமாலி தெரிவித்துள்ளார்.
ஷஃபூரா கோத் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்கள் உடனே தப்பிச் சென்றனர்.
பாகிஸ்தானில் இதற்கு முன்பாகவும் தாலிபான்களும் பிற சுன்னி இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்துத் தாக்கியிருக்கின்றன.



