மஹாவலி கங்கையில் மிதந்து வந்த யுவதி: சடலமாக மீட்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_94.html
மஹாவலி கங்கையில் மிதந்து வந்த நிலையில் குறித்த யுவதி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் இன்று காலை சடலமாக மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி கட்டுகஸ்தோட்டை ஹல்ஒலுவ என்னுமிடத்தில் மஹாவலி கங்கையில் மிதந்து வந்த இச் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சடலம் கண்டி வத்துகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இம் மரணம் தற்கொலையா, நீரில்
மூழ்கியதால் ஏற்பட்ட மரணமா அல்லது கொலையா என்பதனை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மரண விசாரணையையும், பிரேத
பரிசோதனையையும் இன்று நடாத்த உள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

