ஏற்றுமதி அபிவிருத்து அதிகார சபையின் இணைப்பாளராக அகமட் லெப்பை முக்தார்

T.T LANKA OVERSEAS (PVT) நிறுவனத்தின் பணிப்பாளரும்,பிர பல சமூக சேவையாளரும்,சாய்ந்தமருது மு.கா வின் தீவிர போராளியும்,தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களினது வலக் கரமாகவும் உற்ற நண்பராகவும் செயற்பட்டு வந்த அகமட் லெப்பை முக்தார் (ஜஹான்) அவர்கள் அமைச்சர் றிஸாத்தின் அமைச்சின் கீழ் உள்ள பதவிகளில் ஒன்றான ஏற்றுமதி அபிவிருத்து அதிகார சபையின் இணைப்பாளராக அமைச்சர் றிஸாத் அவர்களினால் இம் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.கா வின் போக்கில் அதிருப்தியுற்ற இவர் அண்மைக்காலமாக மு.கா வின் அரசியல் செயற்பாடுகளினை விட்டும் விலகி அமைதியாக இருந்தார்.இவ்வாறு இருந்த இவரின் மீது சந்தேகம் கொண்டு மு.கா வினர் மேற்கொண்ட சில காழ்ப்புணர்வுச் செயற்பாடுகளும்,முஸ்லிம்களுக்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பாணியில் குரல் கொடுக்கும் அமைச்சர் றிஸாத் அவர்களினை அரசியல் ரீதியாக பலப் படுத்தும் முகமாகவும் இவர் அ.இ.ம.கா இல் இணைந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

துறையூர் எ.கே மிஸ்பாஹுல் ஹக்


Related

Local 4338657450207016608

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item