மஹிந்த ஆதரவு கூட்டங்களில் பங்கேற்பேருக்கு எதிராக விசாரணை வேண்டாம்!– ஜோன்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_28.html
மஹிந்த ஆதரவு கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்தக் கூட்டங்களில் பங்கேற்பது தற்போது சாதாரண விடயமாக மாற்றமடைந்துள்ளது.
எனவே கூட்டங்களில் பங்கேற்போருக்கு எதிராக விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பயனற்றது என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ஆதரவு கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக தடைவிதித்திருந்தது.
கூட்டங்களில் பங்கேற்போருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும் அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
