யாழ்.நீதி­மன்­றத் தாக்­குதல் 14 பேருக்கு பிணை

யாழ்.நீதி­மன்­றக் கட்­ட­டத்­தொ­குதி மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­பவம் தொடர் பில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 14 பேருக்கு நேற்­றை­ய தினம் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

14 பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவ­குமார் உத்­த­ர­விட்­டதுன், மாணவர் ஒரு­வரை 5 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான இரண்டு சரீ­ரப்­பிணை­களில் செல்­லவும் நீதவான் அனு­ம­தி­ய­ளித்தார்.

 யாழ்.நீதி­மன்­றத்தின் மீது தாக்­குதல் மேற்­கொண்­டமை, யாழ்.நகரப் பகு­தியில் அமைந்­துள்ள பொலிஸ் காண்­கா­ணிப்­ப­கத்தை தாக்­கி­யமை, வீதி­களில் ரயர் எரித்­தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்­ப­டுத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களில் 130பேர் கைது செய்­யப்­பட்­டனர். 

 இதில், நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியில் மீது தாக்­குதல் மேற்­கொண்­டமை, சிறைச்­சாலை வாக­னங்­களை அடித்து சேத­மாக்­கி­யமை, கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரை காயப்­ப­டுத்­தி­யமை, ஆகிய மூன்று வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்டு 43பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். 

 இந்­நி­லையில் நேற்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட நிலையில், கொழும்­பி­லி­ருந்து வருகை தந்த விசேட குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் மேற்­படி குற்­றத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என 54 பேரை ஆஜர்ப்­ப­டுத்­தப்­ப­டுத்­தினர்.

 இவர்­களின் 12 பேர் வீடியோ ஆதா­ரங்­களை வைத்து கடந்த சில நாட்­களில் விசேட குற்­றத்­த­டுப்பப் பிரிவு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள். விசா­ர­ணையின் போது, பிணை முறி வழங்­கப்­பட்ட 14 பேரின் பெயர்­களை மன்றில் குறிப்­பிட்ட பொலிஸார், இவர்கள் குற்றஞ் செய்­தமை தொடர்­பாக வீடியோ ஆதா­ரங்கள் மற்றும் ஏனைய விசா­ர­ணைகள் தொடர்பில் ஆதா­ரங்கள் இல்­லை­யெ­னவும், இவர்­களை வழக்­கி­லி­ருந்து விடு­விப்­ப­தற்கு ஆட்­சே­பனை இல்­லை­யென தெரி­வித்­தனர். 

 இத­னை­ய­டுத்து, விசா­ர­ணைக்கு, நீதி­மன்றம் அழைப்பு விடுக்கும் பட்­சத்தில் நீதி­மன்­றத்­துக்கு சமூ­க­ம­ளிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 14 பேருக்கும் நீதவான் பிணை வழங்கினார். ஏனைய 39 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


Related

Local 608642892390885879

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item