தமிழ் மொழியில் தேசிய கீதம்: அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_556.html
தமிழ் மொழியில் தேசியம் கீதம் பாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே தமிழில் தேசிய கீதம் இயற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள மாணவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
