பிரதமர் தெரிவு மக்களிடம்: ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_354.html
தேர்தல் வரை காத்திருக்காமல் ஊர் மக்களிடையே சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சி, இன மற்றும் சாதி வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து பொது மக்களுக்கும் சேவை செய்வது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியினுள் கலந்துரையாடப்படுகின்ற விடயங்களில் ஒப்பந்தங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே முக்கியமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார்.
வரையறைக்குட்பட்ட கலந்துரையாடல் மேற்கொள்வதில் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை ஏற்படாதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் குறித்து பேசும் போது பிரதமர் பதவி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளும் கலந்துரையாடுகின்றார்கள்.
இந்நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் முறையுடன், இந்நாட்டின் பிரதமர் பதவி குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
