நேபாள நில நடுக்கத்தின் எதிரொலி - பாரிய மண் சரிவால் ஆறு தடைப்பட்டது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_185.html
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் அந்த நாட்டினூடாக ஓடும் காலி கண்டகி எனும் ஆறு தடைப்பட்டு அப்பகுதியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் குறித்த மண்சரிவால் 150 மீற்றர் உயரத்துக்கு மண் அணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை நீர்மட்டம் 450 அடி உயரத்துக்கு வந்துள்ளதாகவும் அது 600 அடி உயரம் வரை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மண் சரிவால் இப்பிரதேசத்தில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தவறியேனும் மண்சரிவால் ஏற்பட்ட மண் அணையில் வெடிப்புகள் ஏற்பட்டால் அதனைச் சூழ உள்ள பகுதிகள் வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்படும் எனவும் பாரிய அழிவொன்றை சந்திக்க வேண்டி ஏற்படுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த மண் அணை உறுதியாகிவிடும் பட்சத்தில் அப்பகுதியில் பாரிய ஏரி ஒன்று உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
