ரிஷாதைக் கைது செய்யாவிட்டால் உண்ணாவிரதம் - சிங்கள ராவய
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_136.html
அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனைக்கைது செய்து அவரது பதவியைப் பறிக்காவிடின் இன்னும் இரண்டு வாரங்களில் தாம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சிங்கள ராவயவின் பிக்குமார் தெரிவித்துள்ளனர்.
ரிஷாத் ஏற்கனவே வில்பத்து அபய பூமியை நாசம் செய்தவர். ஐ.எஸ்.எஸ்.ஆர் எனும் தீவிரவாத இயக்கமொன்றும் அங்கு நிலை கொண்டுள்ளது. அவர்களை ஊடகவியலாளர்கள் எதிர் கொண்ட போது அவர்களுக்கு இந்த நாட்டின் எந்த மொழியும் தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமாக நாம் ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளோம் எனவும் சிங்கள ராவய தெரிவித்துள்ளது.
பிரபாகரனிடம் வில்பத்து பெளத்த பூமியை எமது இராணுவ வீரர்களே மீட்டனர். இதனை மீண்டும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு வழங்க முடியாது. அத்ற்கு நாமிடமளிக்கமாட்டோம் எனவும் சிங்கள ராவய தெரிவித்துள்ளது.
