நோர்வூட்டில் விபத்து - 3 பேர் படுகாயம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/3_11.html
நோர்வூட் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற விபத்தொன்றில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் பஸ் வண்டி ஒன்றை தாண்டி முன்னே செல்ல முற்பட்ட வேளை இவ்வபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




